2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நூல் நிலையத்துக்கு புத்தகங்கள் கோரல்

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு நூல் நிலையம் ஒன்று எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு தேவையான புத்தகங்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நூலகத்துக்குத் தேவையான கட்டுரை, சிறுகதை, கவிதை, பொதுஅறிவு, பயிற்சிப்பாட புத்தகங்கள், கடந்த கால வினாவிடை புத்தகங்கள் மற்றும் பொதுவான நூல்களை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர், இம் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்ப விரும்புவோர் தலைவர் கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையம் கைதடிமேற்கு கைதடி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X