2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நெல்லியடியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்களால் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ரஞ்சித் மாரசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நெல்லியடி பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையடுத்தே, பொதுமக்கள் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்திகளில் நின்று போதைப் பொருளை நுகருபவர்கள், வீதியில் சென்று வருபவர்களிடம் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X