2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நிஸ்கோ பயிற்சி பட்டறை

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கிவருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்க இயக்குநர் சபை உறுப்பினர்களுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளுக்குமான  பயிற்ச்சிப் பட்டறை, கேப்பாய் சங்கமம் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் ஜங்கரநேசன் பிரதம அதிதியாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பிரதான காரியாலய உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் ஆற்றவேண்டிய சேவைகள் எதிர்காலத்தில் இதனுடைய செயற்ப்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படுகிறது

இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களை சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X