Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 24 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாண முதலமைச்சர் நிதியம் அமைப்பது தொடர்பான விடயம் சாத்தியமாகும் வகையில் உள்ள நிலையில் அதற்கு சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகிய துறைகள் முக்கியமானவை என்பதால் அத்துறைகளை தான் மீண்டும் பொறுப்பேற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் வசமிருந்த 3 துறைகளை திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் முதலமைச்சர் இதனைக் கூறினார்.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்படும் போது முதலமைச்சரின் கீழ் இருந்த சமூக சேவை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகிய துறைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர்; சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், குறித்த மூன்று அமைச்சுகளையும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
அமைச்சுகளை பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
'இந்த மூன்று துறைகளையும் நிர்வகிக்க முடியாத நிலையில் சுகாதார அமைச்சரிடம் கையளித்திருந்தேன். தற்போதுள்ள எனது செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளமையினால், அதனை நான் மீள பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.
காணி விடயம் மற்றும் மீள்குடியேற்ற விடயத்தை நாம் வைத்துக் கொண்டு புனர்வாழ்வை வேறு அமைச்சரிடம் விடுவதனால் திறமையாக செயற்பட முடியாமல் சில நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான காரணங்களினாலேயே இந்த அமைச்சு துறைகளை நான் மீள பெற்றுக் கொண்டிருக்கின்றேன். வேறு காரணங்கள் எவையும் இல்லை' என மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago