2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

நடுக்கடலில் கடற்படையினர் உயிர் அச்சுறுத்தல்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாதகல் பகுதி மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை அறுத்து சேதப்படுத்திய கடற்படையினர் கத்திமுனையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

மாதகல் கடற்பரப்பிலிருந்து மூன்று படகுகளில் சென்ற மீனவர்கள் கரையில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது அப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் படகுக்குள் இறங்கி சோதனை என்ற போர்வையில், மீனவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் படகுகளை கத்தியால் குத்தியும் சேதம் விளைவித்துள்ளனர். மேலும் கடலில் போடப்பட்டிருந்த வலைகளையும் அறுத்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிவழியில் கரை சேர்ந்த மீனவர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸ் நிலையத்தில் இன்று (15) முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவம் ஏனைய மீனவர்களிடத்தே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .