2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரம்

Freelancer   / 2023 மே 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா நகர்ப்பகுதியில் பயணிகள் நடைபாதைகளை, வியாபார நிலையங்கள் ஆக்கிரமிப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

வவுனியா கொரவப்பத்தான வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி என்பவற்றிலேயே இவ்வாறு நடைபாதை வியாபாரம் வீதிகளில் மக்களின் பயணத்திற்கு இடையூறான விதத்தில் காணப்படுகின்றது.

இது தொடர்பில், கடந்த காலங்களில் நகர சபை நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் தற்போது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் மாநகர சபை அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்தை சுற்றுவட்ட வீதியில் கால்வாய்க்கு மேல் மரக்கறிகளை வைத்து விற்பனை செய்து வரும் நிலையில், அதன் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் பலரும் கவலை தெரிவிப்பதுடன், அவ் வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் வீதியை ஆக்கிரமித்து மரக்கறிகளை பரவி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியா மாநகரசபையே பொறுப்புடன் இவ்விடயத்தை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X