2025 மே 10, சனிக்கிழமை

’நன்மை செய்யுங்கள்; தடையாக இருக்கமாட்டோம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

“அமைச்சரவையில் இருக்கின்ற டக்ளஸ் தேவனந்த ஆக இருக்கட்டும், இன்றைக்கு கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிள்ளையானாக இருக்கட்டும், கட்சி தாவி அரை அமைச்சர் ஆகிய வியாழேந்திரனாக இருக்கட்டும், மக்களுக்கு நன்மை செய்வதாக போனவர்கள் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். மாறாக உதவியாக தான் இருப்போம்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற நன்றி கூறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் தமிழர் இந்தத் தீவிலே நாங்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதாகவும் பிறிதான ஒரு மக்களாக இருக்கின்றோம் என்கின்ற ஓர் அடையாளத்தை விற்று பிழைப்பு நடத்தமாட்டார்கள் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

“இந்த அரசாங்கத்தோடு ஒட்டி இருக்கின்ற நீங்கள் இந்த அரசாங்கம் எடுக்கின்ற எங்கள் இனத்தை அளிக்கின்ற எல்லா செயற்பாடுகளுக்கும் நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு மாறாக செயற்படக்கூடாது” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X