2025 ஜூலை 23, புதன்கிழமை

‘நம்பிக்கை அற்றுப்போயுள்ளது’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கில் தொடரும் வாள்வெட்டு, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை என்பனவற்றைக் களமிறக்கி இருப்பதன் மூலம், அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது” என, புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்நடவடிக்கையானது, ஓரளவுக்கு அச்சமின்றியும் பதற்றமின்றியும் தமது அன்றாட அலுவல்களில் நடமாடிவந்த மக்களுக்கு, பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, தெற்கின் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி உள்ளது. எனவே மேற்படி நடவடிக்கை, பேரினவாத ஒடுக்குமுறையின் தொடர்ச்சியென்றே எமது கட்சி கருதுகின்றது” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .