Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 10 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற பெருந்தொகையான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் வியாபாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் சிரமங்களுக்குள்ளாகின்றார்கள்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன் வந்துள்ள பிரதேச சபை செயலாளர், சந்தைக்கு வரும் வாகனங்களை சிரமமின்றி தரிப்பதற்கு வசதியாக சந்தைக்கு முன்பாக ஆடியபாதம் வீதிக்கு கிழக்குப் பக்கமாக, முன்பு வாழைக்குலை வியாபாரம் செய்யப்பட்ட காணியை வாகனங்கள் விடுவதற்கு வசதியாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். சுற்றுமதில் உட்பட 06 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேபோல் வாசகர்களின் நலன்கருதி கொக்குவிலிலுள்ள பொதுநூலகமும் 04 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாசகர் வசதியாக நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, குளப்பிட்டியில் சிறு கட்டடத்தில் இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை மக்களின் வசதி கருதி காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்;ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .