Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லையெனத் தெரிவித்த மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ், நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் தனது கணவரது படுகொலை வழக்கு மூடிவைக்கப்பட்டதெனவும் கூறினார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கிலுள்ள 87 ஆயிரம் விதவைகள் சார்பில் தான் அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தான் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவானதும், அரசாங்கத்தினது உதவிகளை மட்டும் நம்பியிருக்காது, புலம்பெயர் உறவுகள், சர்வதேச உதவிகள் மூலம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் கூறினார்.
தனது முதன்மை பணியாக, விதவைகள் தொடர்பிலான தரவு தளத்தை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், தனது கணவரது பாதையில் பயணிக்கப்போவதாதகவும் கூறினார்.
அத்துடன், தனது கணவருக்கு மரணத்தின் பின்னராக வழங்கப்பட்ட மாமனிதர் கௌரவத்தை, சாவகச்சேரியில் நிறுவப்பட்ட தூபியில் நீக்கியது தனக்கு உடன்பாடில்லையெனத் தெரிவித்த அவர், ஆனாலும் “மாமனிதர்” என்ற பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது கொடுக்கப்பட்டது தான் எனவும் கூறினார்.
“அதனை அகற்றுவதற்கும் அதனை இல்லாமல் செய்வதற்குமான தகுதி எங்களுக்கு இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்” எனவும், சசிகலா ரவிராஜ் கூறினார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago