2025 மே 01, வியாழக்கிழமை

’நல்லூரான் செம்மணி வளைவு’ திறப்பு

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.ராஜ்

நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால், யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'நல்லூரான் செம்மணி வளைவு' ஜனவரி 14ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், திறந்து வைக்கப்படவுள்ளது.

கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில், இந்த வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளைவை நிர்மாணிப்பதற்கு, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிதியொதுக்கீடு செய்ததுடன், தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்.

2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல்லை, விஜயகலா மகேஸ்வரன் நாட்டி வைத்து, வளைவின் கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .