2025 மே 10, சனிக்கிழமை

நல்லூரில் விசேட பூஜை

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி கோவிலில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனால், இன்று (02) காலை ருத்திராபிஷேகமும் விஷேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு முக்கியமான பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம். இது முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு யாழ். மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது.

இந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து மக்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இறைவனுடைய அருள் துணை நிற்க வேண்டும். அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகப் பழமையான கட்சி. அதனுடாக, அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற  இறைவன் துணையிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X