2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று (30) காலை இடம்பெற்றது.

தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில், கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்வதுக்காக  ஆலயத்துக்குச் சொந்தமான  மட்டுவிலில்  உள்ள வயலுக்குச் செல்வார்கள்.

அந்த வயலில் அறுவடை செய்யும்  நெல்லில் இருந்து, அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அமுது வழங்குதல் மரபாக, பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர்விழா 284 ஆவது ஆண்டாக இந்தவருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .