2025 மே 10, சனிக்கிழமை

நல்லூர் கோவிலில் விசேட வழிபாடு

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டும் யுத்தகாலத்தில் அதிரடிப் படையிலிருந்து உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தும்,  காயமடைந்து தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆசி வேண்டியும், நல்லூர் கந்தசுவாமி கோவிலில், இன்று (26) விசேட வழிபாடு நடைபெற்றது.

இதில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸ் அத்தியட்சகர் ஹெட்டியாராச்சி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அபயகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை,  முல்லைதீவு - வற்றாப்பளை அம்மன் கோவில், மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய கோவில்களிலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழிபாடுகளின் நிறைவில், தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

1983ஆம் ஆண்டு, பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் கடமையின் போது 467 பேர் உயிரிழந்துள்ளனர். 1986ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் – திக்கம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய  தாக்குதலில், நான்கு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினம், செப்டெம்பர் 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X