2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் கோவில் வளாகத்தில் நகைகள் அபகரிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எஸ். நிதர்ஷன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவான இன்றைய தினம் (17), கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்ட 8 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளனவென, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 7 தங்கச்சங்கிலி, 1 தாலிக்கொடி உட்பட எட்டு பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நகையைப் பறிகொடுத்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், நல்லூர் கோவில் வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்லடி, செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X