Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஜூலை 23 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
"நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார்.
நல்லூரில், நேற்று (22) நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நல்லூர் சம்பவம், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர், மதுபோதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்ச்த சம்பவம் நடைபெற்று உள்ளது என தற்போது என்னால் சொல்ல முடியும்.
நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதி அவர்களும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்ப்பாதுகாவலரும் மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார். அந்தநேரத்தில் நீதிபதி தான் இலக்கு என வந்திருந்தால், துப்பாக்கிதாரி நீதிபதியை நேராக சுட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தப்பத்தில் சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என கூறுவேன்.
நீதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் எந்த விதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்’ என மேலும் தெரிவித்தார்.
11 minute ago
17 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
31 minute ago
48 minute ago