Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நல்லூர் தேர் உற்சவத்துக்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
நல்லூர் கோவில் தேர் உற்சவம் மிகவும் நடைபெறவுள்ள நிலையில், தற்போது உள்ள கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, யாழ். மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் திங்கட்கிழமை (17) நடைபெறவுள்ளதெனவும் தீர்த்தோற்சவம் மறுநாள் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதெனவும் கூறினார்.
இந்த நிலையில், தற்பொழுது பக்தர்கள் அதிகளவில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதை தாங்கள் அவதானிக்கக் கூடியதாகவுள்ளதெனத் தெரிவித்த அவர், ஏற்கெனவே சுகாதாரப் பகுதியினர் அதேபோன்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் கோவில் நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பக்தர்களுக்கு வழங்கியிருக்கின்றார்களெனவும் அந்த அடிப்படையிலே சுகாதார நடைமுறைகளைப் பேணி சமூக இடைவெளியைப் பின்பற்றி, பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.
“பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நல்லூர் கந்தனுடைய திருவிழா என்றால் இலட்சோப இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடம். ஆகவே, இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்தச் சூழ்நிலையை அனுசரித்து செயற்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது” எனவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
இந்த வருட நல்லூர் கந்தன் கோவில் திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு, ஏற்கெனவே பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், பக்தர்கள் கோவில் தேர் உற்சவத்தை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக முடிகளில் இருந்தவாறே கோவில் உற்சவத்தைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றதெனவும் கூறினார்.
“சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்களும் இந்த இந்த தடவை நல்லூர் கோவில், தேர் உற்சவத்துக்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ளாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
“கூடுமானவரை நீங்கள் வீடுகளிலிருந்து ஆலயத் தேர் உற்சவத்தின் கண்டுகளிக்க முடியும். எனவே, பக்தர்கள் இந்த விடயத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நாங்கள் யாழ். மாவட்டத்தில் கோரோனா சூழ்நிலையை மிகவும் கட்டுப்படுத்தி மிகவும் உச்சபட்சமாக இதனைக் குறைத்து உங்களை பாதுகாத்துள்ளோம்.
“இந்த சூழ்நிலையிலே சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். எனவே, இந்த தேர்த்திருவிழா உற்சவத்தில், பக்தர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
12 minute ago
3 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
26 Aug 2025