Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், என்,ராஜ்
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13
மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை (30)
சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்
3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2
உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக
வாக்களித்தனர்.
அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 6
உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள்
ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய
தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தலா ஒரு
உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026