2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

நவக்கிரக சிலைகள் சேதம்

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

 செட்டிகுளம், முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரகங்கள், விசமிகளால் உடைத்து வெளியே எறியப்பட்டுள்ளதுடன், சில சிலைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. 

 இச்சம்பவம், நேற்று (01) இரவு இடம்பெற்றது. 

 வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்ட சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் இருந்த நவக்கிரகங்களே விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் சிலைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. 

 ஆலய சிலைகள் உடைத்து வீசப்பட்டுள்ளன. காலை ஆலயத்துக்குச் சென்றவர்கள் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து, செட்டிக்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .