2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நாகபூசணி அம்மனின் மகோற்சவம் தொடர்பில் விசேட கூட்டம்

Freelancer   / 2022 ஜூன் 10 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு - நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழா 15 தினங்களில் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இவ் விசேட கூட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், கடற்படையினர், பொலிஸார், வேலணை பிரதேச செயலர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் கலந்து கொண்டனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .