2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

“நாங்கள் வீசிய கழிவுகளை நாங்களே அள்ளுவோம்’’

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்று சூழல் தினத்தினை முன்னிட்டு, “நாங்கள் வீசிய கழிவுகளை நாங்களே அள்ளுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழ்.இளையோர் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வல்லை பாலத்தில் இருந்து உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயம் வரையிலான வீதியின் இரு மருங்கிலும் வீசப்பட்டிருந்த பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றினர்.

பிளாஸ்ரிக் கழிவகற்றும் செயற்திட்டத்திற்காக முகநூலின் ஊடாக இளையோர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். குறித்த அழைப்பின் பேரில் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு குறித்த இடத்தில் ஒன்று கூடியோர் காலை 9 மணி வரையில் அவ்விடத்தில் இருந்த கழிவுகளை அகற்றி பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனத்திடம் ஒப்படைத்தனர்.

குறித்த செயற்திட்டத்தில் சிறுவர்கள் பெண்கள் என வயது வேறுபாடின்றி பலரும் இணைந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .