Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
தமிழ் அரசியல் கைதிகள் எவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளினூடாக விடுவிக்கப்படவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பை, அதிகபட்ச ஆசனங்களுடன், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மாற்று அணியோ, மாற்றுத் தலைமையோ தேவையில்லை என்றும், சில நாள்களுக்கு முன்னர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், த.தே.கூ பேச்சாளர் சுமந்திரன், மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தனர் எனக் கூறினார்.
நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்துள்ள நிலையில், தாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், மீண்டும் தாங்கள் எதிர்க்கட்சியாக வந்து, பல விடயங்களைச் சாதிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள் என்பதை அவர் குறிப்பிட்டார்.
ஆனால், நான்கரை வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச் சாதித்தது என்று வினவிய அவர், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், புதிய அரசியல் சாசனம் ஆகிய எதிலும் அவர்கள் வெற்றிகொள்ளவில்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.
91 அரசியல் கைதிகளுக்கு மேலான வழக்குகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தாங்கள் சில அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம் என்று த.தே.கூ கூறுவது, அப்பட்டமான பொய் என்றும் அவர் கூறினார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago