Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வளர்ப்பு நாயைக் கடத்திச் சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்றப் பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் வயோதிப தம்பதியினர் ஒருவருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் "பொமேரியன்" இன நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், அவர்களின் வளர்ப்பு நாய் வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது.
நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை, வயோதிபத் தம்பதியினரின் வீட்டுக்குச் சற்று தொலைவில் வசிக்கும் இரு இளைஞர்கள், அவர்கள் வீட்டுக்கு வந்து, “உங்கள் நாயை ஒருவர் பிடித்து வைத்துள்ளார். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால், நாயை தருவதாகக் கூறினார். நாய் வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் தாருங்கள்” என கேட்டுள்ளனர்.
தம்பதியினரும் அதற்குச் சம்மதித்து, அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பணத்தைப் பெற்று சென்றவர்கள், அரை மணிநேரத்தில், அவர்களின் நாயை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.
தமது செல்லப்பிராணியான நாய்க்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ எனும் பயத்தில், அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago