2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாய்களை வளர்ப்பதற்கு கட்டுப்பாடு விதித்த மேயர்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கு பொதுமக்கள், தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வளர்க்குமாறு கேட்டுக்கொண்ட யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், நாய்களை தமது வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்த வளர்ப்புத் திட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு, ஏப்ரல் 30ஆம் திகதி வரை மாநகர மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குப் பின்னர், வீதிகளில் நடமாடித்திரியும் நாய்களை, கட்டாக்காலி நாய்களாகக் கருதி, எவ்வித அறிவித்தலுமின்றி மாநகரசபையால் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, மேற்குறித்தத் தீர்மானத்தை, தங்களின் முழுமையான கவனத்துக்கு எடுத்து, மாநகரசபையின் ஆக்கபூர்வமானச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X