Editorial / 2023 ஜனவரி 03 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் சிசுவின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக கிடந்து மீட்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸாருக்கு திங்கட்கிழமை(02) மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அத்துடன், 34 வயதான பெண்ணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணிபொலிஸார் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
59 minute ago
1 hours ago