2025 ஜூலை 26, சனிக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது நல்லூர்த் திருவிழா

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா, நாளை (28) காலை 10 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில், 6ஆம் திகதி மாலை  மஞ்சத்திருவிழாவும், 12ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், அன்று மாலை கார்த்திகை உற்சவமும், 16ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும், 17ஆம் திகதி காலை கஜவல்லி - மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமான (தங்கரதம்) உற்சவமும், 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை வழங்கப்படும் நிகழ்வு, இன்று (27) இடம்பெற்றது.

கொடிச்சீலை செய்வதற்காக காளாஞ்சி, ஆலய பிரதம குருவால் கடந்த 19ஆம் திகதி,கொடிச்சீலை தயாரிப்பவர்களிடம் வழங்கப்பட்டது.

காளாஞ்சி பெற்றுக்கொண்டவர்கள், கொடிச்சீலையைத் தயாரித்து, சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வேல்மடம் முருகன் கோவிலில் இருந்து, சிறிய ரகத் தேரில் கொடிச்சீலையை எடுத்து வந்து, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருவிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X