2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குழியில் தாது கோபுரம் அமைக்க தற்காலிக தடை

Editorial   / 2017 ஜூலை 07 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாதுகோபுர கட்டுமான பணிகளுக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று (07) தடையுத்தர பிறப்பித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வழக்கு எடுத்துகொள்ளப்படும் வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என, அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.

நாவற்குழி பகுதியில் அனுமதி பெறாது அமைக்கப்பட்டுவரும் விகாரை தொடர்பாக பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்ததுடன், அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் சாவகச்சேரி பிரதேச சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டடம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X