2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘நிதி குறைவு; வேலைகளோ அதிகம்’

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையைப் பொறுத்தவரையில், நிதிவளங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால், பூர்த்தி செய்யப்படவேண்டிய வேலைகளோ, மலையளவில் குவிந்திருக்கின்றனவென, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பேசாலை - கடற்கரைப் பூங்காவை, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (09) பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுற்றுலாற்றுறைக்கான நியதிச் சட்டங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு, முறையாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமையன்று (07), சுற்றுலாற்றுறைப் பணியகம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாகவும் இப்பணியக வழிகாட்டலின் கீழ், வடபகுதியில் காணப்படும் இயற்கை வளம் நிரம்பிய சுற்றுலாத்தளங்கள், கடற்கரை, பொழுதுபோக்கு மையங்கள் என்பன புனரமைப்புச் செய்யப்பட்டு, சுற்றுலாற்றுறை மேம்படுத்தப்பட இருக்கின்றதெனவும் கூறினார்.

இவ்வாறான கடற்கரைகளிலுள்ள தனியார் காணிகளுக்குச் சொந்தக்காரர்கள், அழகான சிறிய குடில்களைச் சட்டப்படி அமைத்து, அவற்றைச் சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக குறைந்த வாடகை அடிப்படையில் கையளிக்கின்ற போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமெனவும், முதலமைச்சர் கூறினார்.

இதேவேளை, இப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், கடலுணவுகளில் தயாரிக்கப்பட்ட சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த உள்ளூர் உணவு வகைகளை, விரும்பி உட்கொள்ளக்கூடிய வழிவகைகளை மேற்கொள்ளலாமென, அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X