2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நிதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள், இன்று (24)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில்,  ஆனைக்கோட்டை ஜே 132 மற்றும் ஜெ 133 கிராம உத்தியோகத்தர்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்,  2018ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கத்தால் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்  பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும் அதில் இரண்டு கட்டங்களாக  ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, யாழ். மாவட்டச் செயலாளர் , தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு தமது கோரிக்கை மகஜர்களைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .