Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
நித்திரை கலக்கத்தில் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டு, மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.
யாழ்ப்பாண நிலையத்தில் இறங்க வேண்டியவர், நித்திரையினால் இடத்தை தவற விட்ட நிலையில், சுன்னாகம் புகையிரத நிலையத்தில் புகையிரதம் தரித்து நிற்பதனை அவதானித்து அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். (R)
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025