2025 மே 22, வியாழக்கிழமை

நினைவேந்தல் கூட்டத்துக்கு பல்கலையில் அனுமதி மறுப்பு

Editorial   / 2018 மே 11 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், சொர்ணகுமார் சொரூபன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இன்று (11) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவ பிரதிநிதிகள், கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X