2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நியமனம் வழங்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில், இன்று (05) காலை நடைபெறவிருந்த வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, பிற்போடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.  

நேர்முகத்தேர்வுக்குத் தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த சில முறைப்பாடுகளின் அடிப்படையில், அது தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.  

நேர்முகத்தேர்வுக்குத் தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்டப் பிரதிநிதிகள், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, ஆளுநர் செயலகத்தில், இன்று (05) காலை சந்தித்தனர்.  

இதன்போது, அவர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதாக, ஆளுநர் உறுதியளித்தார். 

அத்துடன், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிவரங்களும் அடங்கிய பட்டியல், குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து, அமைச்சால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேற்குறித்த பட்டியலை வடமாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-external-candidates-who-faced-interview-2/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  

இந்தப் பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X