2025 மே 17, சனிக்கிழமை

நியமனம் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (31) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 148 ஆரம்பக் கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும் 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டன.

இதன் போது உரையாற்றிய ஆளுநர், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானதெனவும் விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த மாகாணம் இன்று கொடுக்கிறதெனவும் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பொறுப்பை இறைபக்தியுடனும் சமுதாய நோக்கத்துடனும் செய்து இந்தத் தேசத்தைத் திருப்பவும் கட்டியெழுப்பும் பணியை செவ்வனே செய்யவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோளெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .