2025 மே 17, சனிக்கிழமை

‘நியமனம் விடயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பிற மாகாணங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகளை நியமனம் செய்யும் விடயத்தில் உடனடியாக பிரதமர் தலையிட வேண்டுமெனத் தெரிவித்​த வடமாகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், இந்த நடவடிக்கை பொருத்தமற்றது எனவும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சுகாதாரம் சம்பந்தமான விடயங்கள் பேசப்படுகையில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழியர் வெற்றிடங்களுக்கு வடக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது. இது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையாகும். எமது மாகாணத்திலேயே பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையற்றிருக்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் இந்த விடயத்தில் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றார். இதற்கு பிரதமர் எந்த பதிலையும் வழங்காமல் தலையசைத்துவிட்டு இருந்தார். இந்நிலையில், கூட்டம் நிறைவடைந்த பின் அவை தலைவர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,  நில அளவை திணைக்களம், மின்சாரசபை, சுகாதார திணைக்களங்கள் போன்றவற்றுக்கு வெளி மாகாணங்கில் இருந்து இளைஞர், யுவதிகள் நியமிக்கப்படுகின்றனர். இது பொருத்தமற்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .