Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ் அரசியல் கைதிகள், பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கைதிகள் விடுவிக்கப்படுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடாகும் என்றும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், “இக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில், அவர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை, இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று (20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பை முன்வைத்து எமது மக்களிடம் வாக்குகள் பெற்று, இன்று இந்த அரசில் பதவிகளையும், தனிப்பட்ட சலுகைகளையும் அனுபவித்து வருகின்ற தரப்பினருக்கு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய பொறுப்பும் சுமத்தப்பட்டிருப்பதை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.
“எமது மக்களது பிரச்சினைகள் என வருகின்றபோது, இயலாமை மற்றும் முயலாமைக்குள் அடங்கிவிடுவதே அவர்களது வழக்கமான அரசியலாகியுள்ளது என்பதை இப்போது எமது மக்கள் நன்குணர்ந்து வருகிறார்கள்.
“தற்போது அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள், ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற இக்கைதிகள் தொடர்பிலான வழக்குகள் முடிவுக்கு வரவுள்ள தருவாயில், அவ்வழக்குகளை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“மேற்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரையில், அவர்கள் நியாயமான வகையில் நடத்தப்பட வேண்டும் என, நாம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலை தொடர்பில், அரசாங்கம் உடனடி அவதானங்களைச் செலுத்தி, இக்கைதிகளுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago