2025 மே 19, திங்கட்கிழமை

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல் மேற்கொண்டதில், தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்டு; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (24) மாலை குறித்த தாக்குதல்  நடைபெற்றுள்ளது.

அது குறித்து தெரியவருவதாவது,

தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும், தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், குறித்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை கைவிட்டு அந்நபர் சென்றுள்ளார்.

அதனால் பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் நேற்று (24) மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது, வீதியில் வழிமறித்த குறித்த நபர் மண் வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு அம்புலன்ஸ் வண்டி மூலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X