2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நிறைமாத பசுமாடு படுகொலை

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வேலணை - 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்தது வந்த சுமார் 1 இலட்ச ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று படுகொலை செய்து இறைச்சியாக்கியுள்ளனர்.

குறித்த பசுமாடு 20 நாள்களுக்குள் கன்று போட இருந்தாக, அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர்.  அத்துடன் அது  தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி படுகொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டை தீவு சந்தியில் இராணுவம்இ பொலிஸாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தீவகத்தில் தொடர்ந்து பசுமாடுகள் உட்பட மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்படுவதhக, மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .