2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீண்ட நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

காங்கேசன்துறை - கல்கிசை இடையே நீண்ட நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த சேவை ஆகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு செல்லும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இரவு நேர தபால் சாதாரண ரயில் சேவையாக நடத்தப்பட்ட இந்த சேவையை, குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான புதிய சேவையாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .