2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘நீதிக்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபை தொடர்பில், நீதிக்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்தி வருகின்றனர். ஆயினும் இத்தகைய குற்றச்சாட்டகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்லவென, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில், சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சபைக்குக் கொண்டு வரப்பட்ட நியதிச் சட்டங்களை யாரும் தடை செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், இங்கு பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவெனவும் அதே நேரம் சபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் நியதிச் சட்டங்கள் எவையும் தடைப்பட்டதாகவும் இல்லையெனவும் கூறினார்.

ஆனால், நியதிச் சட்டங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான நியதிச் சட்டங்களில் இருக்கின்ற தவறுகளையும் நாங்கள் திருத்திக் கொண்டு அதனை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன்,  நியதிச் சட்டங்களை உருவாக்குவதற்கு முதலமைச்சர் தடையாக இருந்ததில்லையென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X