Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு, நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது” என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
யாழில். நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் பொலிஸாருக்கு வழங்கி இருந்தோம். பொலிஸார் அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை. ஏன் அவர்கள் அதனை சமர்ப்பிக்கவில்லை.
எங்கள் நாட்டில் 500 ரூபாயுடன் பொலிஸாரை கொண்டு எதுவும் செய்யலாம். அவ்வாறு எதுவும் நடந்ததா என தெரியாது. எனக்கு தெரியாத விடயத்தை நான் பேசவிரும்பவில்லை.
நீதிமன்றம் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்க முடியாது. அவ்வாறு இருக்கையில் ஏன் நீதிமன்று என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கு மன்றுக்கு வருமாறு அழைப்பாணை தரப்படவில்லை.
அது மட்டுமின்றி என்னிடம் விசாரணை செய்யும்படி எனது ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார். நீதி படித்தவருக்கு தெரிய வேண்டும். சட்டத்தின் பிரகாரம் நாங்கள் சுயாதீன ஆணைக்குழு. என்னிடம் கேள்வி கேட்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றுக்கு தான் உண்டு” என தெரிவித்தார்.
21 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago