Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றொசாந்த்
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை தொடர்பான சந்தேகநபர்கள், நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர் என, பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ், மன்றில் தெரிவித்தார். இப்படுகொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.
எம்.றியாழ் முன்னிலையில், இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சகோதர்களான இரு சந்தேகநபர்களும், மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பாதிகப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, படுகொலை நடந்த சமயத்தில் தாம் மருதனார் மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றதாகக் கூறி, மன்றில் சி.சி.டிவி காணொளியை மன்றில் சமர்ப்பித்து இருந்தனர்.
இதையடுத்து, குறித்த காணொளி மருதனார்மடத்தில் எடுக்கப்பட்டது இல்லை எனவும், அவை ஊர்காவற்றுறை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட காணொளி எனவும், தவறான காணொளியை மன்றில் சமர்ப்பித்து, மன்றை பிழையாக வழிநடத்த முயல்கிறார்கள் எனவும், சட்டத்தரணி க.சுகாஷ் குற்றஞ்சாட்டினார்.
சந்தேகநபர்கள், மன்றைப் பிழையாக வழிநடத்த முயன்றால், அதற்கான பலன்களை அனுபவிப்பார்கள் என, நீதவான் தெரிவித்தார். அத்துடன், குறித்த வழக்குத் தொடர்பில், இதுவரை காலமும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து புலன்விசாரணை அறிக்கைகளையும் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வழக்கை, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் வரையில் இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி, ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண், படுகொலை செய்யபட்டார்.
குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள், அன்றைய தினம் மாலை மண்டைதீவுச் சந்தியில் உள்ள ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025