2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து  மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களில் இனிவரும் நாள்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே, தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை கருத்தில்கொண்டு, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை,  பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X