2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீர் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு யாழுக்கு பிரதமர் வருகிறார்

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்

 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஒக்டோபர் 6ஆம் திகதி யன்று, யாழ்ப்பாணத்தில்  ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் இப்போது 5,000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும்.

மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர்  நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.

யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம்  பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X