2025 மே 17, சனிக்கிழமை

நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர் விநியோகம்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

 

நிலவும் கடும் வரட்சி காரணமாக, நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளுக்கு, வனஜீவராசி திணைக்களத்தால், குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, நெடுந்தீவு பிரதேசச் செயலகம் தெரிவித்தது.

நெடுந்தீவில், நிலவும் கடும் வடை்சி காரணமாக, அப்பகுதியில் உள்ள குதிரைகள் குடிநீர் இல்லாது வந்த நிலையில், குதிரைகள் நீர் அருந்துவதற்கு என நிர்மாணிக்கப்பட்டுள்ள தொட்டிகளில், தினமும் வனஜீவராசி திணைக்களத்தால் நீர் ஊற்றப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அனர்த்த முகாகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன், சாராப்பிட்டியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்தும் தேசிய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தும் குடிநீரைப் பெற்று வழங்கி வருவதாக, பிரதேச செயலகம் மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .