2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நேர்முகத் தேர்வும் பிரயோகப் பரீட்சையும்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடக்கு மாகாணப் பாடசாலகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும் பிரயோகப் பரீட்சையும் நாளை முதல் இடம்பெறும் என்று மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு   1 (ஆ) தரப் பிரிவுக்கு விஞ்ஞான தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவினால் கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

அதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது.

பரீட்சையில் சித்தியடந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் பிரயோகப் பரீட்சையும் நாளையும் நாளை மறுதினமும் மாகாணக் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .