2025 மே 17, சனிக்கிழமை

நைஜீரியா பிரஜைகள் உட்பட 9 பேரிடம் விசாரணை

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்கள்,  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

யாழ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்கள், இன்றைய தினம் மதியம் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் நைஜீரியா நாட்டு பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .