Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு, மற்றும் வளலாய் பகுதிகளில் சட்டத்துக்கு முரணான வகையில் கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பெக்கோ வாகனங்களை, இன்று புதன்கிழமை (08) கைபற்றிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.
கனிய வளங்கள், மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியைப் பெறாது சட்டத்துக்கு முரணான வகையிலும், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் மேற்படி வாகன உரிமையாளர்கள் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஐந்து பெக்கோ (ஜே.சி.வீ) வாகனத்தினை, கனரக வாகனங்களின் உதவியுடன் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளனர்.
நிலத்தடியின் ஆழத்தையும் மீறி இவர்கள் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நடவடிக்கையினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் நிலம் கீழ் இறங்கி செல்கின்றது. இதனால் அப்பகுதி எங்கும் பாரிய கிணறுகள் போல் காட்சியளிக்கின்றன.
இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகனால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய கல் அகழ்வில் ஈடுபடுவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கையினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கல் அகழ்வில் ஈடுபடுவர்கள் தொடர்பில் பொதுமக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டால் பொலிஸார் அப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .