2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை: 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 9 பேரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில், 12 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களின் விளக்கமறியல் காலம், ஒரு வருடத்தைத் தாண்டியுள்ள நிலையில், நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் முடிவடையும் நிலையில், அவர்களுடைய விளக்கமறியலை நீடிக்குமாறு, யாழ். மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை, 10ஆம் சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் முடிவடையும் நிலையில், அவருக்கான விளக்கமறியலையும் நீடிக்குமாறு கோரி, கடந்த 2ஆம் திகதியன்று, யாழ் மேல் நீதிமன்றில், அச்சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விசாரணைகள் முடிவடைந்தவுடன், 1 மாத காலத்துள் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என, நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X