2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொங்கல் மங்கள விழா - 2016

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள பொங்கல் மங்கள விழா,  சனிக்கிழமை(09) பிற்பகல் 4 மணிக்கு தென்மராட்சி கலை மன்றத்தில் நடைபெறவுள்ளது.

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற தலைவர் ஸ்ரீ.பிரகாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது, கார்த்திகை கலைமதி யசோதரா விவேகானந்தரின், 'திலகம் நர்த்தனாலயம் கிருத்திய நிவேதாஞ்சரி ' எனும் நாட்டியாஞ்சலி நிகழ்வும் தென்மராட்சி இலக்கிய அணியின், 'பொங்கல் பொருள் பற்றி பேச முனைந்தால்' எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X