2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பாசையூர் தாக்குதல்; இருவர் கைது

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாசையூர் பகுதியில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் கடற்கரை வீதிக்கு அருகாமையில் வைத்து புதன்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆம் திகதி சாப்பாட்டு கடை ஒன்றில் இரண்டு தரப்பினருக்கிடையில் முறுகல் நிலை தோன்றி, அச்சண்டை நாள் முழுவதும் தொடர்ந்தது

இந்நிலையில், அன்றைய தினம் 3.30 மணியளவில் பாசையூர் அந்தோனியார் வாசிகசாலையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நால்வர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அந்தோனிப்பிள்ளை மணி (வயது 70), ஞானசீலன் மதியழகன் (வயது 42), ஞானசீலன் எழில்வதனன் (வயது 40), தேவதாஸ் ஜோன் பிறேமதாஸ் (வயது 37) ஆகியோர் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் 13 பேர் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும், தாக்குதல் மேற்கொண்ட அனைவரும் பணத்துக்காக அடிதடியில் ஈடுபடும் குண்டர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பலர், ஊரை விட்டு தப்பி சென்றுள்ள நிலையில் அன்டையா மற்றும் விஸ்வா என்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கத்திகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X